Sunday, May 31, 2015

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, தனது குழந்தை பருவ தோழியான பிரியங்கா சவுத்ரியை சமீபத்தில் மணந்து கொண்டார்.

அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் ரெய்னா விளையாட சென்று விட்டார். இதனால் அவரால் மனைவியுடன் நேரத்தை செலவிட முடியவில்லை.

ஐபிஎல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் போது கூட, 'என்னால் மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை’ என டிவிட்டரில் பதிவேற்றியிருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்து விட்டதால், ரெய்னா தனது மனைவியை அழைத்து கொண்டு பாரிசுக்கு தேனிலவு சென்று உள்ளார்.

மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை டிவிட்டரில் பதிவேற்றி ‘பாரிசில் காதல் அலை’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer