Sunday, May 31, 2015

இது குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மட்டும். இது ஒன்றும் தவறான நோக்கத்துடன் எழுதப்பட்டது இல்லை.

நீங்கள் அழகானவர்கள் என்பதை விட நீங்கள் மேலும் அழகாக இருக்கவேண்டியவர்கள். என்பதே பொருத்தமானது அண்மையில் யாழ் பல்கலையில் நடைபெற்ற புதிய மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் முகப்புத்தகத்தில் பார்க்க முடிந்தது. அனேகமான நீங்கள் சாறி அணிந்திருந்தீர்கள். இதில் உங்கள் அழகு ஒன்றும் குறைவு படவில்லை. ஆனாலும் சாறி அணிவது தொடர்பாக ஏராளமான விடயங்களை நீங்கள் அறியவேண்டியிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

1. நீங்கள் கடையில் சாறி வாங்கும்போது அந்த சாறி அழகானதா என்றும் உங்களுக்கு பிடித்த கலர் என்ன என்றும் மட்டும் யோசிக்கிறீர்கள். இது தவறானது. அந்த சாறி உங்களுக்கு பொருத்தமானதா என்பதற்கு பல காரணிகள் உண்டு.

2. எல்லா நிறமும் எல்லாருக்கும் பொருத்தமாக இருக்காது. நீங்கள் நிறமானவரா நிறம் குறைந்தவரா அல்லது அழவான நிறம் உள்ளவரா என்பதைபொறுத்து உங்களுக்கு பொருத்தமான சாறியின் நிறம் வேறுபடும்.

3. உங்கள் சாறியில் கோடுகள் இருக்குமாயின் அவை சிறிதாக இருக்கவேண்டுமா பெரிதாக இருக்க வேண்டுமா கிடையாக இருக்கவேண்டுமா நெடுவாக இருக்கவேண்டுமா புள்ளிகள் இருக்குமாயின் அவை சிறிதாக இருக்க வேண்டுமா பெரிதாக இருக்க வேண்டுமா என்பது உங்கள் உயரம் உடற்பருமன் மற்றும் முகத்தின் சாயலை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும். எல்லாரும் எல்லாவிதமாகவும் தெரிவுசெய்ய முடியாது.

4. உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக கை நீளமாக இருக்க முடியாது. உங்கள் கையின் நீளம், பருமன் மற்றும் உடலமைப்பினை பொறுத்தே ஃப்ளவுசின் கை நீளமாக இருக்க வேண்டுமா கட்டையாக இருக்க வேண்டுமா அளவாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். அதே போன்று கழுத்தில் கொலர் வைக்கவேண்டுமா அல்லது கழுத்தின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதும் உங்கள் கழுத்து மற்றும் உடலமைப்பினை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.

5. நீங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு எது என்பதை பொறுத்தும் சாறியின் நிறம் மற்றும் வகை (பட்டு, காட்டண்) மாறுபடும். எல்லா நிகழ்வுக்கும் எல்லா சாறியினையும் அணிய முடியாது.

6. சாறி அணிவதென்பது ஒரு கலை. நடுத்தரவயது பெண்கள் அணிவது போன்று இளம் பெண்கள் அணிய முடியாது. எந்தவொரு சாறி உங்கள் கையில் இருந்தாலும் சரியான விதத்தில் அணிந்துகொண்டால் அதில் ஒரு அழகு உள்ளது. தெரிவுகள் முதல் அணிவது வரையான முழுமையான வழிகாட்டிகள் இப்போது இணையத்தல் உள்ளது. மீண்டும் ஒரு முறை சாறி வாங்கவோ ஃப்ளவுஸ் தைக்கவோ முன்பு அதை பயன்படுத்துவது நல்லது.

Google
How to select saree for body type
How to select blouse type for body type
How to select saree for occasions

சாறி தெரிவு மற்றும் அணிதல் பற்றி மேலதிக தகவல்களை பெற தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்

பெண்களுக்க மட்டும்தான் எழுதுவீங்களா என்று Jee கேட்பார். பசங்களுக்கு நான் எழுதல ஏன் என்றால் பசங்களுக்க எதை போட்டாலும் அழகாத்தான் இருப்பாங்க.

நன்றி

Jesudas Chandrasegarar  முகப்புத்தகத்தில் இருந்து பிரதி செய்த தகவல் இது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer