Saturday, May 30, 2015

ஐபிஎல் 8வது தொடரில் பெங்களூர் அணியில் விளையாடியது தொடர்பாக இளம் வீரர் சர்ஃபராஸ்கான் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சர்ஃபராஸ்கான் (17), 13 போட்டிகளில் 111 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இளம் வீரரான இவர் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 பந்துகளில் 45 ஓட்டங்களை அடித்தது அனைவரையும் வியக்க வைத்தது.

இந்த தொடர் அவருக்கு சர்வதேச வீரர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடியது பற்றி அவர் கூறுகையில், ஐபிஎல் போட்டியில் கோஹ்லி, கெய்ல், டிவிலியர்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடியது மகிழ்ச்சி.

இவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகினர். நிறைய ஆலோசனைகள் வழங்கினர். இதன்மூலம் துடுப்பாட்டத்தில் எழுச்சி பெறலாம். ஐபிஎல் தொடர் மூலம் எனது திறமை மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்திய அணியில் இடம் பிடிப்பதை இலக்காக வைத்துள்ளேன். இதற்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை பெறுவேன் என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer