Friday, May 29, 2015

இரண்டு தேசிய விருதுகளை வென்ற திரைப்படம் காக்கா முட்டை. உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பல விருதுகளை வென்று ’சிறந்த திரைபடம்’ என்ற அங்கீகாரம் பெற்றுவிட்ட காக்கா முட்டை திரைப்படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் உலகெங்கிலுமிருந்து வரவேற்புகள் கிடைத்தவாறு இருக்கின்றன.

பெரும்பாலும் ரஜினி படங்களை மட்டுமே நூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடும் ஜப்பான், தென் கொரியா நாடுகள் காக்கா முட்டை திரைப்படத்தையும் அவ்வாறே திரையிட முன்வந்திருக்கின்றன. அதேபோல் பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தரும் விலையில் காக்கா முட்டை திரைப்படத்தின் திரையிடும் உரிமைகளையும் வாங்கியிருக்கிறார்கள் ஜப்பான், தென்கொரியா நாட்டு விநியோகிஸ்தர்கள்.

தேசிய விருது, திரைப்பட விழாக்கள் விருது என அடைந்த வெற்றிகளுடன் இந்த வெற்றியையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது காக்கா முட்டை டீம். உலகமெங்கும் காகா முட்டை திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி ரிலீஸாகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer