Sunday, May 31, 2015

கனடாவில் தனது மகளுக்கு உதவிட ஏரியில் குதித்த 40 வயது மதிக்கதக்க தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரம்ரன் நோர்த் பார்க் டிரைவில் உள்ள புறோவெசொஸ் லேக்கிற்கு தந்தை ஒருவர் தனது 5 மற்றும் 10 வயதுடைய மகள்களுடன் சனிக்கிழமை சென்றுள்ளார்.

பெண்கள் இருவரும் தண்ணீரில் விளையாடிய போது 5 வயது சிறுமி தண்ணீருக்குள் முழுகியுள்ளார்.

அப்போது அவளுக்கு உதவ தண்ணீருக்குள் குதித்துள்ளார். அதற்குள் மகள் பத்திரமாக ஏரியிலிருந்து வெளியே வந்து விட்டாள்.

ஆனால் தந்தையை காணவில்லை. இதையடுத்து அவசர சேவை பிரிவினர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

சனிக்கிழமை காலை 11.45 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. அவரை நீரில் மூழ்கி தேடிய மீட்பு பணியினர் பிற்பகல் 5-மணியளவில் தந்தையின் உடலை கண்டுபிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் மரணமடைந்த 40 வயது மதிக்கப்படும் அந்த நபரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer