Sunday, May 31, 2015

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2008-ம் ஆண்டு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக குருசஹாய்கஞ்ச் பகுதியில் வினோத் குமார் (40) என்பவரை மனைவி தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் நேற்று கன்னோஜ் மாவட்ட கூடுதல் நீதிபதி, குற்றவாளியான அந்தப் பெண்ணுக்கும் அவருக்கு இந்த கொலையில் உடந்தையாக இருந்த கவுதம் என்பவருக்கும் மரண தண்டனை மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மரண தண்டனை தீர்ப்பை மாநில உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்னர் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer