Sunday, May 31, 2015

கமல் அடுத்து நடிக்கவிருக்கும் படம் தூங்காவனம்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஷயத்தில் ஒரு துரோகம்! அந்த படத்தின் முதல் போஸ்டர் டிசைனை முதலில் தமிழ்நாட்டில் வெளியிடாமல் ஆந்திராவில் வெளியிட்டிருக்கிறார். அங்கு அந்த படத்தின் பெயர் ‘சீக்கட்டி ராஜ்யம்’. அதற்கப்புறம்தான் தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது இந்த டிசைன்கள். இங்கு வெளியிடப்பட்டதற்கும் அங்கு வெளியிடப்பட்டதற்கும் சில மணி நேரங்கள்தான் வித்தியாசம் என்றாலும், கமலின் இந்த திடீர் தெலுங்கு பற்று பலரையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது. ‘சாவுங்கடா.... அவருடைய உத்தம வில்லனை ஓட விடாமல் கமல் சாரை கவலை கொள்ள வச்சீங்கள்ல? அவரு இப்படிதான் பண்ணுவாரு’ என்று அவரது அதிதீவிர ரசிகர்கள் வேண்டுமானால் சண்டைக்கு வரலாம். ஆனால் கமல் செய்தது சண்டை போட வேண்டிய சங்கதிதான்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer