Saturday, May 30, 2015

நாட்டின் பிரதமர் தாம் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது, ஊழலை அனுமதிக்காமலும் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மோடி நேர்காணல் அளித்துள்ளார். அதில் முந்தையப் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், நாட்டின் பிரதமர் தாம் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது என்றும், மற்றவர்கள் ஊழல் செய்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். அப்படியானால், பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையாக இருந்து, மற்றவர்கள் ஊழல் செய்ய அனுமதி அளித்துள்ளார் என்று மறைமுகப் பொருள் தரும்படியாக அவரது இந்த நேர்காணல் இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

முன்னதாக மன்மோகன் சிங்கை தமது இல்லத்துக்கு வரவழைத்து மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து தேனீர் விருந்து அளித்திருந்தார். மேலும், கறுப்புப் பணத்தை பதுக்க இடமளித்த காங்கிரஸுக்கு இப்போது கறுப்புப் பணம் மீட்புக் குறித்து கேள்வி எழுப்ப எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.அதோடு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நிலவிய பொருளாதாரத்தை நாடே அறியும் என்றும் அவர் கூறியுள்ளார்.உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கும் வரை கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிடாது என்றும் அவர் கூரிஒயுல்லார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer