Saturday, May 30, 2015

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டோனி போல் சிறப்பாக செயல்படுவேன் என்று விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி யூன் 7ல் வங்கதேசம் செல்கிறது. இங்கு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டி யூன் 10ம் திகதி தொடங்கவுள்ளது.

டெஸ்ட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்று விட்டதால் அவர் இடத்தில் சகா தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக அவர் கூறுகையில், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டோனியைப் போல நான் சிறப்பாக செயல்படுவேன்.

வங்கதேசத்தில் அதிக போட்டிகளை விளையாடி இருக்கிறேன். அங்கு உள்ள ஆடுகளங்கள் கொல்கத்தாவில் இருப்பது போன்று தான் இருக்கும். அதனால் விளையாடுவதில் சிரமம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer