Sunday, May 31, 2015

ஜெயலலிதா தமிழகத்தில் திறமையான ஆட்சி நடத்துவார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதாவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், ஜெயலலிதா தமிழகத்தில் திறமையான ஆட்சி நடத்துவார் என்றும் புகழாரம் சூட்டினார்.

நிலம் கையகப்படுத்தும் மசோதா அவசரச் சட்டமானது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், உலகமே போற்றும் அளவுக்கு பிரதமர் இந்தியாவில் ஆட்சி நடத்தி வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும், நிலம் கையகப்படுத்தும் மசோதா தேசத்தின் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer