Saturday, May 30, 2015

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இதில் 2வது ஒருநாள் போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஷிக்கந்தர் ரசா சதம் அடித்தார். 85 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 100 ஓட்டங்கள் குவித்தார். சிபாபா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் சார்பில், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதில் பாகிஸ்தான் அணித்தலைவர் அசார் அலி (102) சதம் அடித்து வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer