Sunday, May 31, 2015

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின், சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

கிரிக்கெட் துறையில் பல சாதனைகளை படைத்து உச்சம் தொட்ட சச்சினுக்கு, கார்களில் அதிவேகத்தில் செல்வது என்பதும் பிடித்தமான ஒன்று. ஆனால் அதுவே தனக்கு தீராத தலைவலியை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குர்கானில் விளையாட்டு மையம் ஒன்றை நேற்று திறந்து வைத்த சச்சின், அந்த விழாவில் இது தொடர்பாக கூறுகையில், ” நான் சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் இருந்த போது பி.எம்.டபிள்யூ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள்.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும் ஒரு பிரம்மாண்ட காரின் சாவியை என்னிடம் கொடுத்து விட்டு, ‘டெஸ்ட் டிரைவ்’ செய்து அதன் வசதிகளை பற்றி கூறுமாறு கேட்டனர்.

இதைத் தொடர்ந்து நான் என்னுடன் அஞ்சலியையும் கூட்டிச் சென்றேன். ஆனால் அந்த காரை எவ்வளவு வேகமாக செலுத்தினேன் என்று மட்டும் சொல்ல மாட்டேன்.

அந்த காரை நிறுத்தியதும் தான் நாங்கள் வித்தியாசமாக உணர்ந்தோம். அதிவேக கார் பயணத்தால் அஞ்சலிக்கும் எனக்கும் ஏற்பட்ட தலைவலி ஒருநாள் முழுக்க நீடித்தது என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer