Saturday, May 30, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உடையும் நிலை உருவாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கின்றார். ஆனாலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் சில மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றன. அதற்கு ஜனாதிபதி ஒரு போதிலும் இணங்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையிலேயே, ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள மஹிந்த அபிமானிகள் பிரிந்து சென்று புதிய கூட்டணி அமைத்து, மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள் என்று தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பிலான சந்திப்பு, மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer