Sunday, May 31, 2015

முன்னாள் உலக குத்துசண்டை வீரர் ஏமன் மெக்கீயின் மகனும் குத்துசண்டை வீரருமான ஏமன் மெக்கீ ஜூனியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தை சேர்ந்தவர் ஏமன் மெக்கீ ஜூனியர்(Eamonn Magee Jr).

முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் ஏமன் மெக்கீயின் மகனான இவர் தந்தையை போலவே குத்துச்சண்டை வீரராக திகழ்ந்துவந்தார்.

இந்நிலையில் நேற்று காலை மேற்கு பெல்பாஸ்ட்((Bellfost) பகுதியில் உள்ள சம்மர்ஹில்(SummerHill) பூங்காவில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் தலைமை பொலிஸ் அதிகாரி ஜான் மெக்வியா கூறுகையில், இந்த கொலை தொடர்பாக டுன்மூர்ரி பகுதியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏமன் மெக்கீயின் மரணத்துக்கு பலர் தங்களில் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

பெல்பாஸ்ட் பகுதியின் குத்துச்சண்டை உலக சாம்பியனான கார்ல் பிராம்டன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஏமன் மேக்கீ கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெனிபர் மெக்கென் கூறுகையில், இந்த இளம் வீரர் துரதிஷ்டவசமாக தனது வாழ்க்கையை இழந்துவிட்டார். அவரது மரணம் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் அவர்கள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer