Saturday, May 30, 2015

இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த ராஜபக்ஷ என்கிற பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படமாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் பெயருக்கு இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதுலுவாலே சோபித தேரரின் பிறந்த நினத்தை முன்னிட்டு சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் சக்திகளுக்கு இடமில்லை. ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போராட்டத்தை சோபித தேரர் ஆரம்பித்திருக்காவிட்டால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, ஜனநாயகத்தை நிலைநாட்டியிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer