Sunday, May 31, 2015

மூன்றாம் அணி அமைக்கும் எண்ணமில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தொல்.திருமாவளவன் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். பரஸ்பரம் இருவரும் பொன்னாடைப் போர்த்திக் கொண்டனர். சுமார் 15 நிமிடங்கள் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சென்னையில் வருகிற 9ம் திகதி தமது கட்சி சார்பில் நடக்கும் கருத்தரங்குக்கு விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்க தாம் அவரை சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் கூட்டணி ஆட்சி என்கிற தமது கட்சியின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், எனவே மூன்றாவது அணி அமைக்கும் எண்ணமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer