Friday, May 29, 2015

உத்தரபிரதேசம் கான்பூரில் ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமகனின் தந்தை மணமகளின் தங்கையை முத்தமிட்டதால் கல்யாணத்தையே நிறுத்திய மணமகளால் கல்யாணமண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் உள்ள நாகலா கைபர்த் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பரமேஷ்வரி தயால் இவர்களுடைய மகள் பெயர் ருச்சி. இவருக்கும் ஐதாரவை சேர்ந்த பாபுராம் மகன் ராஜேஷ் என்பவருக்கும் இருவீட்டார் சம்மத்துடம் திருமணம் நிச்சயக்கபட்டது.

இவர்களுடைய திருமணம் புதன் கிழமை அன்று நடக்க இருந்தது. அப்போது மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது. மாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் புடைசூழ  பெண் வீட்டிற்கு வந்தனர். அப்போது மாப்பிள்ளையின் தந்தை பாபுராம்க்கு விபரீத ஆசை ஏற்பட்டது, அதாவது மணமகள் ருச்சியின் ஒன்று விட்ட சகோதிரியை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். இதனை நேரில் பார்த்த ருச்சி  கடும் அதிர்ச்சி அடந்தார். இப்படி ஒழுக்கம் இல்லாத குடும்பத்தில் வாழ்ந்தால் நம் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று உடனே திருமணத்தையும் நிறுத்தினார். மாப்பிள்ளையின் தந்தை தனது மகனின் எதிர்காலம் வீணாக போய்விடும் என்றும் மகனை திருமணம் செய்து கொள்ளும் படி மணமகளை மன்றாடி வேண்டினார். மணமகளிடம் நடந்தவற்றிக்கு மன்னிப்பும் கேட்டார். பிடிவாதமாக இருந்த மணமகள் தன் முடிவில் உறுதியாக இருந்தார். மணமகளின் தாயும் சென்று மணமகள் ருச்சியிடம் சமாதானம் செய்ய முயன்றார் அதுவும் கடைசியில் முடியாமல் போனது.

இதனால் இரு வீட்டாருக்கும் வாய் தகறாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டாரை ஒரு ரூமில் அடைத்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் இரு வீட்டாரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில் கல்யாண செலவை பெண்வீட்டாரிடம் இருந்து பெற்று தரவேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் போலீசாரிடம் வலியுறுத்தினர். நாங்கள் கொடுத்த ரூ27 ஆயிரத்து 900 ரூபாயை திருப்பி தரவேண்டும் என்று கேட்டு கொண்டனர். பெண் வீட்டார் அந்த தொகையை மாப்பிள்ளை வீட்டாரிடம் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட மாப்பிள்ளை விட்டார் பெண் வீட்டில் இருந்த தங்கள் நடையை கட்டினர்.

கான்பூரில் ஒரு முத்தத்தால் திருமணமே நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer