Saturday, May 30, 2015

சில்மிச ஆசாமிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி வீட்­டிற்குள் புகுந்து பெண்­ணொரு­வ­ரிடம் பாலியல் சேட்டை புரிந்த ஆசாமியொருவருக்கு கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி எம்.இளஞ்­செழியன் 9 மாத சிறைத்­தண்­ட­னையும் ஆயி­ரத்து ஐநூறு ரூபா அப­ரா­தமும் விதித்துள்ளார். அத்துடன்,பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு 25 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்­கு­மாறும் உத்­த­ர­விட்டார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்த ஆசாமியை கல்­முனை மேல்­நீ­தி­மன்­றத்தில் ஆஜ­ரான போதே மேற்­படி தீர்ப்பு வழங்­கப்­பட்டு, அத்­தீர்ப்பு நேற்று முன்­தினம் அக்­கரைப்­பற்று நீதி­மன்­றத்தால் நிறை­வேற்­றப்­பட்­டது.

அக்­க­ரைப்­பற்று கடற்­கரை பிர­தே­சத்தை சேர்ந்த இந்த ஆசாமி, அதே பிர­தே­சத்தை சேர்ந்த பெண்­ணொரு­வரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் சேட்டை புரிந்­துள்ளார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட பெண் அப்­போது அக்­க­ரைப்­பற்று பொலிஸில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து குறித்த நபரை கைது செய்து அவ­ருக்கு எதி­ராக வழக்கு தொடர்ந்­தனர்.

வழக்கு நடை­பெற்று வந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 21 ஆம் திகதி அப்­போது அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக இருந்த ரி.சர­வ­ண­ராஜா 15 மாத கடு­ழிய சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்தார்.
இத்­தீர்ப்­புக்கு எதி­ராக குறித்த நபர் கல்­முனை மேல்­நீ­தி­மன்­றத்தில் முறையீடு செய்து வழக்கு நடை பெற்று வந்த நிலையிலேயே கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

எம்.இளம்செழியன் அடுத்தவாரம் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer