டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் அணித்தலைவர் அலஸ்டயர் குக்.
இங்கிலாந்து – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 350 ஓட்டங்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் லுக் ரோஞ்சி 88 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 253 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதில் ஆடம் லைத் (107) சதம் விளாசினார். அணித்தலைவர் அலஸ்டயர் குக் (75) அரைசதம் அடித்தார்.
முன்னதாக குக் 33 ஓட்டங்கள் எடுத்த போது, இங்கிலாந்து வீரர்களில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்தார்.
முன்னாள் வீரர் கிரகாம் கூச்சே இதுவரை இங்கிலாந்து வீரர்களில் அதிக ஓட்டங்கள் குவித்தவராக இருந்தார். இவர் 118 டெஸ்டில் 8,900 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
22 ஆண்டு காலமாக அவர் தக்க வைத்திருந்த சாதனையை தற்போது அலஸ்டயர் குக் முறியடித்துள்ளார்.
Sunday, May 31, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment