Monday, April 20, 2015

தமிழகத்தில் இருந்து இப்போது இரண்டுவிதமான திரைப்படங்கள் வருகின்றன ஒன்று பேயப்படம் தவறினால் பேய்த்தனமான படங்கள் என்று தரம்பிரிக்க முடிகிறதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சமீபத்தில் வந்த பேய்ப்படங்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தது காஞ்சனா2 திரைப்படம்.. பேய்த்தனமான படங்களுக்கு உதாரணமாக இருந்தது உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா.

காஞ்சனா 2ல் திரைக்கதையை உருவாக்கிய விதம் பணத்தை உழைப்பது எப்படியென்ற கோணத்தில் நகர்த்தப்பட்டுள்ளது, அதில் திரைப்படம் வெற்றி பெறுவது நிஜமாகியுள்ளது.

அதேவேளை உதயநிதி – நயன்தாரா நடித்த நண்பேன்டா படத்தைப் பார்த்த சிலர் இனிமேல் தமிழ் படங்களே பார்க்க திரையரங்கு போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்கள்.

சமீபத்தில் வெற்றிபெற்ற அனைத்துப் படங்களின் காட்சிகளையும் உட்புகுத்தி காஞ்சனா 2 தயாரிக்கப்பட்டுள்ளது.

மூடத்தனமான, சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் கதையாக இருந்தாலும் இது ஒரு பொழுது போக்கு படம் என்ற அடிப்படையில் பார்க்கலாம்.

கிராபிக்ஸ்சை மேலை நாட்டவர் விஞ்ஞானத்திற்கு பயன்படுத்த இந்தியர்கள் பேய்ப்படங்களுக்கும் அம்மன் படங்களுக்கும் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

நல்ல அறிவியல் படங்களுக்கு தமிழில் வர்த்தகம் இல்லை என்பதால் காஞ்சனாக்கள் மேலும் பல வரலாம் என்பது தெரிகிறது.

படங்களின் கதை விளங்காத கூட்டம் திரையரங்கு போய் பேய் உணர்வில் காலத்தை ஓட்டவும் பேய்க்கதைகள் துணையாக உள்ளதாக சிலர் கூறுகிறார்கள்.

பாமரனுக்கும் எளிதில் விளங்கும் பேய்களை படத்தில் கொண்டு வந்தால் சனம் குவியும் என்பது காஞ்சனா 2 இயக்குநரின் கணிப்பு..

காஞ்சனாவுக்குக் குவியும் கூட்டம் தமிழ் சமுதாயத்தின் இன்றைய அவல நிலையை படம் பிடித்துக்காட்டும் மதிப்பீடாகவும் பணம் உழைக்க குறுக்கு வழியாகவும் இருப்பதை மறுக்க இயலாது.

பிரபல கதாநாயகர்களை ஜனத்திற்கு தெரியும் என்பதால் அவர்களுக்குக் கூட்டம் கூடுகிறது.. அவர்களைப் போலவே பேய்களையும் பெரும்பான்மை மக்களுக்கு தெரிகிறது.. ஒன்று பிரபல நடிகர் வேண்டும்.. இல்லை பேய் வேண்டும்..

காஞ்சனா 2 இயக்குநர் பேயை தேர்வு செய்தது சரியான கணிப்பே..

ரஜினி – விஜய் – அஜித் – சூர்யாவும் பேய் படங்களில் நடித்தால் வசூல் இரட்டிப்பாகும் என்பதை சொல்லவும் வேண்டுமோ....

0 comments :

Post a Comment

 
Toggle Footer