Saturday, April 11, 2015

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பபகுதியை சேர்ந்தவர்  சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15).அங்குள்ள தனியார்  பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.

 கடந்த 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற  சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து  கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, -வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த   பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23)  என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது.

10-ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு  ஆசிரியை கோதை பாடம் எடுத்து உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும்  பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மாணவர்கள் இல்லாத நேரம் வகுப்பறையிலேயே இருவரும் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால்  பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி  கடந்த 31-ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள  60  பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer