Thursday, March 12, 2015

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல பயிர் புளி.

தெற்கு ஆசியாவில் அதிகமாக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. புளிய மரம் 80 அடி உயரம் வரை வளரும். வெவ்வேறு நீளங்களில் காய்கள் காய்த்து பழுக்கும்.

தடித்த ஓடுக்குள் புளி பாதுகாக்கப்படுகிறது. அதன் உள்ளே கடினமான விதைகளும் இருக்கும்.

விதை நீக்கிய புளி சந்தையில் விற்கப்படுகிறது. 'தாமரின்டஸ் இண் டிகா' என்ற அறிவியல் பெயர் கொண்ட புளி 'பபேசி யேசி' தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.

புளியில் கால்சியம், வைட்டமின் 'பி' பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, உணவில் மணமூட்டவும், சுவையூட்டவும் புளி பயன்படுகிறது.

புளி மட்டுமல்ல, கொழுந்து, புளி இலைகளும் சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன.

மேலும் புளியங்க்கொட்டையில் 63% மாவுப்பொருட்களும், 14-18% ஆல்புமினும், 4.5-6.5% பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன.

புளியின் மருத்துவ குணங்கள்

புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது.

பிலிப்பைன்ஸில் இலைகள் 'டீ' யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுத்தப்படுகிறது.

வயிறு, ஜீரணக்கோளாறுகளுக்கு மருந்தாகிறது. புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும்.

புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும்.

புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும்.

புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.

புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும்.

புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும்.

மேலும் இதை அரைத்து கண்ணை சுற்றி பற்றுப்போட்டால் கண் வலி, கண் சிவப்பு குணமாகும்.

புளியமர வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் குஷ்டரோகத்திற்கு உபயோகப்படுகின்றன.

புளிக் குழம்பு

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு , அரிசி, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் , தக்காளி சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.

பின்னர் இதனை ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் ஊற்றி கடுகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பின், உரித்த பூண்டு பற்களை(இரண்டாக கீறி கொள்ளவும்) சேர்த்து வதக்கவும்.

இந்த கலவை நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும்.

பின்னர் அரைத்த தக்காளி - வெங்காய கலவை, மல்லி பொடி, ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இவையனைத்தும் வதங்கியதும், அரைத்த தேங்காய், தேவைக்கேற்ப புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கினால் புளிக் குழம்பு ரெடி.

பயன்கள்

உடல்சூட்டை தணிக்கும் சிறந்த மருந்து.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கண் எரிச்சல் சீக்கமே சரியாகிவிடும்

புளி கஷாயம்

முதலில் புளியின் இலை துளிர்களை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியில் கொஞ்சம் நீர் விடவேண்டும்.

இறுதியில் அந்த துளிர்களை நீரில் போட்டு நீண்ட நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால் புளி கஷாயம் தயார்.

பயன்கள்

மலேரியா வருவதை தடுக்கும்.

இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.

மஞ்சள் காமாலை ஜலதோஷம் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை விரட்டும் தன்மை கொண்டது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer