’லிங்கா பட பிரச்சனைக்கும் எனக்கும் என்ன சம்மந்தம். ஏன் என் பெயரை இழுக்குறாங்க?’ என ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறாராம் விஜய். புரளிகளை உருவாக்கி உலவவிடுபவர்கள் எப்படித்தான் யோசிப்பார்களோ! அது அவர்களுக்கே வெளிச்சம்.
சரி, இந்த பிரச்சனையை விட்டுவிட்டு விஜய் நடித்துவரும் ‘புலி’ திரைப்படத்தின் பக்கம் திரும்பினால் அங்கும் ஒரு புரளி உலவுகிறது. சிம்புதேவன் படத்தின் விஜய் மூன்று ரோலில் நடிக்கிறார் என்பது தான் அந்த வந்ததி(சமீபத்தில் வெளியான கத்தி திரைப்படத்தில் விஜய் இரண்டு ரோலில் நடித்தது குறிப்பிடத்தக்கது). விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து புலி படத்தை தயாரிக்கும் SKT ஸ்டூடியோஸ் “விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் தவறானது” என்று தங்களது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளனர்.
விஜய் இந்த பிரச்சனைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு எவ்வித டென்ஷனும் இல்லாமல் முழு ஈடுபாட்டுடன் படத்தில் நடித்தும், பேக்-அப் சொன்ன பிறகும் ஸ்பாட்டிலேயே இருந்து படக்குழுவினருடன் நேரத்தை செலவு செய்துகொண்டும் இருக்கிறாராம்.
Friday, February 27, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment