முன் பின் முகம் தெரியாதவர்களையும் நண்பர்களாகக்கும் சமூகவலைத்தளமான பேஸ்புக் ஒருவர் மீது மற்றொருவர் பொறாமைப்படுவதற்கு காரணமாக அமைகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Michigan பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இந்த எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது முன்னர் ஒவ்வொரு பயனரும் ஏதாவது ஒரு தகவலை போஸ்ட் செய்வதில் ஆர்வம் காட்டிய போதிலும் தற்போது அது குறைவடைந்து தாம் போஸ்ட் போடுவதை நிறுத்தி மற்றவர்களுடைய பேஸ்புக் புரொபைலை பார்வையிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன்போது மற்றவர்களுடைய போஸ்ட்கள், அவற்றுக்கான அதிகரித்த லைக் என்பவற்றினை பார்த்து ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்கின்றனர் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக தாமாக முன்வந்த 80 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
Thursday, February 26, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment