திருமணம் ஆனாலும் மற்றொரு நபருடன் தொடர்பு வைத்து கொள்ளலாம் என தென் கொரியா நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.
தென்கொரியாவில் 1953-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 62 ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்து வந்தது.
அந்த சட்டத்தின் படி மனைவியோ அல்லது கணவனோ வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பது குற்றம் என்றும் அதற்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை என்பதும் விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரத்து 500 பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த வழக்குகளில் தண்டிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இவ்வழக்கை தலைமை நீதிபதி உட்பட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்துள்ளது.
விசாரணையின் முடிவில் தலைமை நீதிபதி கூறியதாவது, மற்றொரு நபருடன் உறவு வைத்துக்கொள்வது என்பது ஒழுக்கக்கேடானது என்ற வகையில் கண்டனத்துக்கு உரியது தான்.
ஆனால் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் அரசாங்க அதிகாரம் தலையிடக்கூடாது என கூறி, கள்ள உறவில் ஈடுபடுவது குற்றமில்லை என தீர்ப்பளித்துள்ளார்.
Friday, February 27, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment