Friday, February 27, 2015

மரியாதை மனசுல இருந்தா போதும்னு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. கூட்டத்துல அதை காண்பிச்சு குறுகுறுக்க வைப்பார்கள். அந்த விஷயத்தில் அட்டக்கத்தி நந்திதா ஆஹா ஓஹோதான். தான் நடிக்கும் எந்த படப்பிடிப்பாக இருந்தாலும் சரி. வந்தவுடன் அந்த படத்தின் இயக்குனர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதை இப்பவும் வழக்கமாக வைத்திருக்கிறார். இத்தனைக்கும் இன்றைய மார்க்கெட்டில் நந்திதா என்கிற மீனுக்கு செம கிராக்கியும் கூட.

அப்படியிருந்தும் ஏன் இப்படி? ‘நம்மள மக்கள்ட்ட கொண்டு சேர்க்கிறவங்க அவங்கதான். ஒரு விதத்தில் குருவும் அவங்களே, தெய்வமும் அவங்களே’ என்கிறார் ஆயிரம் வணக்கங்களுடன்! இதே ஃபீல்டில்தான் கால் கால் போட்டுக் கொண்டு, ‘கரெக்ட்டான நேரத்துல ஷாட் வைங்கப்பா’ என்று இயக்குனரை அதட்டும் இளசுகளும் இருக்கிறார்கள். ம்... எல்லா பீட் ரூட்டும் ஒரே அளவாவா இருக்கு

0 comments :

Post a Comment

 
Toggle Footer