Friday, February 27, 2015

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் வளர்ச்சிக்கு ஒபாமா தான் காரணம் என அமெரிக்காவின் முன்னால் ஆளுநர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில், மேரிலாண்ட்(Maryland) மாகாணத்தில் அரசியல் மாநாடு ஒன்று நடைபெற்றது.

அதில், கலந்துகொண்ட அலாஸ்கா(Alaska) மாகாணத்தின் முன்னால் ஆளுநர் சாரா பலின்(Sarah Palin) கூறியதாவது, மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ் அமைப்புகள் வேகமாக வளர்வதை ஒபாமா அரசு தடுக்க தவறியததால் தான், அந்த அமைப்பு தற்போது பலம் வாய்ந்த அமைப்பாக உருவெடுத்துள்ளது.

தீவிரவாதத்துடன் இஸ்லாம் மதத்தை ஒப்பிடக்கூடாது என கூறிய ஒபாமாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த Sarah Palin, நுற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபோது, அந்த மதம் ஏன் அதை தடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

கிறிஸ்துவர்கள் அனைவரும் ஒபாமாவின் நலனிற்காக இருக்கும்போது, இஸ்லாமிய தீவிரவாதிகள் அவரது தலையை வெட்ட காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இனிமேலும் பொறுத்துக்கொண்டு இருக்காமல் நாசிசவாதிகளை கொன்றது போல், அமெரிக்க படை ஐ.எஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க வேண்டும்.

மேலும், ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்வதை விடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஒபாமா ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer