Saturday, February 21, 2015

பிரபல நடிகை த்ரிஷாவின் அந்தரங்க குளியலறைக் காட்சி இணையதளங்களில் வெளியான போது தென்னிந்திய ரசிகர்களையே திகைக்க வைத்தது. அதற்குப் பிறகு, பல்வேறு பிரபல நடிகைகளின் அந்தரங்க ஃபோட்டோக்கள், செல்ஃபிகள் என வெளியாகி பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக் கின்றன. சமீபத்தில் வெளியான பிரபல நடிகை ஹன்சிகாவின் குளியலறை வீடியோக் காட்சிகள் கோலிவுட்டில் தொடங்கி தமிழகத்தைப் பரவலாக கிறு கிறுக்க வைத்திருக்கிறது.

பாத்ரூமில் ஹன்சிகா குளித்துக்கொண்டிருக்கும்போது... அவருக்கு தெரியாமல் வாஷ்பேசின் அடிப்புறத்தில் ரகசிய கேமரா வைத்து படம் பிடிக்கப்பட்டு தற்போது, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வெளியாகியிருப்பது  நடிகைகளை மட்டுமல்ல குடும்பப் பெண்களையும் திகைக்க வைத்திருக்கிறது. பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வீடியோ குறித்து நடிகை ஹன்சிகா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

 ""இது ஒரு நடிகையின் வீடியோதானே என்று பார்த்துவிட்டு கடந்துபோக முடியாது; போகவும் கூடாது. காரணம், நடிகையும் ஒரு பெண்தான். ஒரு நடிகை தன் சுய விருப்பத்தோடு கிளுகிளுப்பு காட்சிகளில் நடிப்பது என்பது வேறு. ஆனால், அதே நடிகையின் அறையில் கேமராவை ஃபிக்ஸ்பண்ணி அவரது அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பது என்பது அசிங்கமானது; அருவருப்பானதும் கூட. எல்லோருமே பணத்தை மட்டுமே வாழ்க்கையில பிரதானமாக்கிக்கொண்டு தனிமனித ஒழுக்கத்தையும் நீதியையயும் இளைய தலைமுறைகளுக்கு சொல்லிக் கொடுக்க மறந்துக்கிட்டிருக்கிறதோட விளைவுதான் இதுபோன்று பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அந்தரங்கமாக படம்பிடிப்பதும் அதை நெட்டில் உலவவிடுவதும்'' ’என்று வேதனையோடு சுட்டிக் காட்டுகிறார் கவிஞரும் ஊடகவியலாளருமான சுகந்தி.

பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கு எதிரான அமைப்பின் தலைவர் நிர்மலா கொற்றவை நம்மிடம், ""இரகசியக் கேமராக்கள் பொருத்தி பெண்களின் அந்தரங்க தருணங்களை, பெண் உடலை ஆபாசமாகப் படம்பிடித்து பெண்களை மிரட்டுவது என்பது... பெண் உடல் பற்றிய ஆணாதிக்க சமூகத்தின் கருத்தியலே இப்படிப்பட்ட பாலியல் ரீதியான வக்கிரங்களுக்கான அடிப்படை காரணம்.

இந்த ஆண் அதிகாரமே பல்வேறு வக்கிரங்களுக்கு வழிவகுக்கிறது, வன்புணர்வு, ஆபாசப் படமெடுத்தல் ஆகியவை இதன் நீட்சியே. இதுபோன்ற வக்கிரங்களை, ஆபாச புகைப்படங்களை, வீடியோக்களைக் கண்டு பெண்கள் அஞ்சக்கூடாது.  நமது அச்சமே அவர்களது மூலதனம்.

nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer