இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாகவுள்ள இலங்கைத் தமிழ் மக்கள், அவர்களின் சொந்தப் பிரதேசங்களில் மீளவும் குடியேற விரும்பினால் அவர்களை யாரும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு அழைத்து மீளவும் குடியேற்றுவது இந்திய- இலங்கை ஒப்பந்ததுக்கு எதிரானது என்று ஜாதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பதிலுரைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், “புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்கு திரும்பி வருவதை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது. இங்கு வந்து குடியேற விரும்புபவர்கள் இந்த நாட்டின் குடியுரிமையைத் தொடர்ந்து வைத்திருப்பவர்கள் எனில், அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். அத்துடன், அவர்கள் மீளக் குடியேறுவதைத் தடைசெய்ய எவருக்கும் அதிகாரம் கிடையாது.” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிலுள்ள இலங்கை தமிழ் மக்களை திரும்பி அழைப்பது தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, “1983 ஆம் ஆண்டு சம்பவத்தின் பின்னர் தமிழகத்திற்கு தப்பிச்சென்ற தமிழர்களின் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டு இந்தியாவின் விசேட பிரதிநிதியாக இலங்கையில் இருந்த இந்திய உயர்ஸ்தானிகர், ஜெ.என்.டிக்ஸித் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, இலங்கையில் இருந்து 1983 ஆம் ஆண்டு தமிழகத்திற்குச் சென்ற தமிழர்களை இந்தியா பொறுப்பேற்கவும், இலங்கையில் பிரஜாவுரிமையை இழந்திருந்த இந்திய தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கு அன்று தீர்மானிக்கப்பட்டது.
அதனால், தமிழகத்திலுள்ள தமிழர்களை நாட்டிற்கு வரவழைத்து மீள குடியமர்த்த வேண்டும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கின்றார் எனின், அன்று ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை மீறப்படும். அதனால் அதற்கு நாம் முற்றாக எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.” என்று தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
Home
»
Sri Lanka
»
இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதை யாரும் தடுக்க முடியாது: சுரேஷ் பிரேமச்சந்திரன்
Saturday, February 28, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment