Friday, February 27, 2015

வங்கதேச அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை அணி உலகக்கிண்ணப் போட்டியில் பெற்ற சில சாதனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சங்கக்கரா - டில்ஷான் இணைந்து சேகரித்த 210 ஓட்டங்களே ஒரு நாள் போட்டியில் 2வது விக்கெட்டுக்கு இலங்கையின் அதிகபட்சமாகும். இதே கூட்டணி 2012ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 200 ஓட்டங்கள் எடுத்ததே முன்பு இந்த வகையில் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.

பாரம்பரியமிக்க உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில், ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர்கள் சதத்தை பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். இங்கு இலங்கை அணி 18 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மெல்போர்னில் 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்த அணிகள் தோற்றதில்லை. அந்த வகையில் இது 11வது நிகழ்வாகும்.

22வது முறையாக 100 ஓட்டங்களை கடந்துள்ள சங்கக்காரா ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தோர் பட்டியலில் விராட் கோஹ்லி (இந்தியா), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்), சவுரவ் கங்குலி (இந்தியா) ஆகியோருடன் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதல் மூன்று இடங்களில் முறையே இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (49 சதம்), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (30), இலங்கையின் ஜெயசூர்யா (28) இருக்கிறார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer