ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜா, அரசு ஊழியர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார்.
நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜா அரசு ஊழியர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், ஆட்சி என்பது மாறிக்கொண்டே இருக்கும்.
ஆந்திராவில் நேற்று காங்கிரஸ் ஆட்சி இருந்தது, இன்று தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. நாளை எங்கள் கட்சி ஆட்சி வரலாம்.
ஆனால் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நிரந்தரமானவர்கள்.அவர்கள் எந்த ஆட்சிக்கும் அடி பணியாமல் நியாயமாக செயலாற்ற வேண்டும்.
தகுதி இருந்தும் சிலருக்கு அரசு சலுகை கிடைக்காத நிலையில், தகுதியே இல்லாதவர்களுக்கு தெலுங்கு தேச தலைவர்களால் சலுகை வழங்கும் நிலை உள்ளது.
தேர்தல் நேரத்தில்தான் நான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்காரி. ஆனால் எம்.எல்.ஏ.வாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அனைத்து மக்களுக்கு பொதுவானவர்.
ஆனால் இங்கு சில அரசு அதிகாரிகள் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு சாதகமாக நடக்கிறார்கள். அவற்றை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன் என்று எச்சரிக்கிறேன்.
மேலும், நீங்கள் ஓய்வு பெறும் வரை மக்களுக்கு நியாயமாக செய்யப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.
Friday, February 27, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment