Thursday, February 26, 2015

கல்யாணம் ஆன பின்பும் ஹீரோயினாக நடிக்க வைக்கிற தில் எந்த இயக்குனருக்கும் இருப்பதில்லை.

அதே தில் சம்பந்தப்பட்ட ஹீரோயின்களுக்கும் இருப்பதில்லை. ஆனால் இவ்விரண்டு சித்தாந்தமும் உடைக்கப்பட்டிருக்கின்றன அண்மை காலமாக. விரைவில் குவா குவாதான் என்று கருதி, ஏதேனும் விசேஷம் இருக்கா? என்று கேட்டுக் கொண்டிருந்த நிருபர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார் அமலாபால்.

இருக்கே... இப்ப மலையாள படம் ஒன்றில் ஹீரோயினா நடிக்கிறேன். சீக்கிரம் தமிழ்ப்பட அறிவிப்பு வரும் என்று. அப்படியே வேறு பக்கம் நகர்ந்தால்... நம்ம த்ரிஷா. எங்கேஜ்மென்ட் முடிந்த கையோடு கல்யாணம்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஜெயம் ரவியோடு டூயட் பாட கிளம்பிவிட்டார்.

‘அப்பாடக்கர்’ என்ற புதிய படத்தில் இவர்தான் முழு ஹீரோயின். விஷயம் அம்மா டக்கராயிருக்கே? பல வருஷம் கழித்து இந்த படத்தை தயாரிக்கிறது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் போன்ற பெரிய படங்களை எடுத்து பெரிய அளவில் நஷ்டமான தயாரிப்பு நிறுவனம் இது. பெரும் தொழிலதிபருக்கு மனைவியாக போகும் த்ரிஷாவை கல்யாண நேரத்தில் ஹீரோயினாக நடிக்க வைப்பதில் ஏதேனும் உள் குத்து இருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறது சினிமாவுலகம். இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer