நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தில் தேவைபட்டால் திருத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது காங்கிரஸ் அரசு போலவே பாஜக அரசும் செயல்படுவதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர் என்றும், உண்மை அதுவல்ல என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் அரசு நினைத்திருந்தால் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி இருக்கலாம்.ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை, உண்மையில் விவசாயிகளுக்குத் தேவையான நலத்திட்டங்களுக்கான மாற்றங்களுடன்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதா அவசரச் சட்டமாக நிறைவேற்றப்படுகிறது.
விவசாயிகளுக்கு பாதகம் ஏற்படுகிறது என்று தெரியும் பட்சத்தில் உடனடியாக மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக பிரதமர் மேலும் கூறியுள்ளார். அதோடு ஊரக நலத்திட்டங்களை கடந்த அரசு கைவிட்டதுதான் காங்கிரசின் படுத்தோல்விக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் நாங்கள் ஊரக நலத்திட்டங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தவில்லை என்று பிரதமர் தமது உரையில் கூறியுள்ளார்.
Friday, February 27, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment