தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இன்று சட்டபேரவை செயலரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 19ம் திகதி தேமுதிக எம்எல்ஏக்கள் 9 பேர் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவை தவறாக விமர்சித்துப் பேசியதாக புகார் கூறப்பட்டு, மொத்த தேமுதிக எம்எல்ஏக்களுக்கும் நடப்பு சட்டபேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் இன்று 27ம் திகதி தேமுதிமுக எம் எல் ஏக்கள் தவறாகப் பேசியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.
அதன் படி இன்று புகாருக்கு ஆளான 9 தேமுதிக எம் எல்ஏக்களும் சட்டப்பேரவை செயலரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர். இதற்கிடையில் புகாருக்கு ஆளான தினகரன், சேகர் உள்ளிட்ட 6 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.
Friday, February 27, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment