பூடானில் இந்திய பிரதமர் மோடி பற்றி கீழ்தரமாக கேலி சித்திரம் வரைந்த இந்திய ஆசிரியை பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பூடானில் உள்ள தோகாவில் அமைந்துள்ள இந்திய பள்ளி ஒன்றில், இந்தியாவை சேர்ந்த ஆசிரியை பணிபுரிந்து வருகிறார்.
அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றி வரைந்த கேலி சித்திரம் ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அந்த கேலிச் சித்திரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றதையடுத்து அவரிடம் நிர்வாகம் விசாரணை நடத்தியுள்ளது.
விசாரணையை அடுத்து முதலில் அவரை 3 நாட்கள் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்.
பின்னர் தற்போது அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு அவரது நண்பர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்தியா ஜனநாயக நாடு என்றும் அந்நாட்டு குடிமக்கள் தங்களது கருத்து சுதந்திரத்தை வெளியிட உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பள்ளி நிர்வாகம் இதுபற்றி கூறுகையில், மோடி கேலி சித்திரத்துடன் பள்ளியின் சின்னம் மற்றும் பெயரை குறிப்பிட்டிருந்ததாலேயே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Friday, February 27, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment