பாப் இசை உலகில் சாதனைப் படைக்கும் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மிக்க பிரிட் விருதுகள் - 2015 நேற்று லண்டனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாப் பாடகி மடோனா மேடையிலிருந்து கிழே விழுந்தார். ரசிகர்கள் மற்றும் கலைஞர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
பிரிட் விருதுகள் நிகழ்ச்சியின் போது, பாப் பாடகி மடோனா அவரே பாடி ஆடவும் செய்தார். நிகழ்ச்சியில் கேப் கோட்டை அணிந்திருந்தார். திடீரென உடன் ஆடும் நடன நடிகர் கேப் கோட்டை கவனிக்காமல் இழுக்க, மடோனா மேடையின் மேலிருந்து கிழே தடுமாறி விழுந்தார்.
அவர் அணிந்திருந்த கேப் கோட் இறுக்கத்துடன் கட்டியிருந்ததால், அவரணிந்திருந்த துணி நழுவாமல் அவரை பிடித்து இழுத்திருக்கக் கூடும். உடனே தடுமாறி விழுந்தார் மடோனா. ஆனாலும் அவர் பாடலை நிறுத்தாமல், நிகழ்ச்சியைத் தொடர்ந்தார்.
முடிவில் பேசிய மடோனா, “ எனக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. ரசிகர்களின் அன்பு இருக்கும் வரை யாராலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது. உங்கள் அன்பு என்னை தூக்கி நிறுத்தும். ரசிகர்களுக்கு நன்றி” என்றார் மடோனா.
Thursday, February 26, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment