Friday, February 27, 2015

வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண ஆட்டத்தில் சங்கக்காரா, டில்ஷான் சதம் அடிக்க இலங்கை அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 38 வயதான டில்ஷான் குவித்த 161 ஓட்டங்களே உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை வீரரின் தனிநபர் குவித்த அதிகபட்ச ஓட்டமாகும். இதற்கு முன்பு 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் கென்யாவுக்கு எதிராக அரவிந்த டி சில்வா 145 ஓட்டங்கள் எடுத்ததே இலங்கை வீரரின் அதிகபட்சமாக இருந்தது.

அதே போல் இலங்கை வீரர் சங்கக்காரா 73 பந்துகளில் தனது சதத்தை அடைந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது அதிவேக சதமாகும். கடந்த ஆண்டு ஆசியக்கிண்ண கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 83 பந்துகளில் சதம் கண்டதே முந்தைய அவரது மின்னல்வேக சதமாகும்.

மேலும் நேற்றைய ஆட்டத்தில் சங்கக்காரா 2 பிடியெடுப்பும், ஒரு ஸ்டம்பிங்கும் செய்தார். இதன் மூலம் உலகக்கிண்ணத்தில் அவர் ஆட்டம் இழக்கச் செய்தோரின் எண்ணிக்கை 51 ஆக (33 ஆட்டம்) உயர்ந்தது. இந்த வரிசையில் அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 52 பேரை ஆட்டமிழக்க செய்து (31 ஆட்டம்) முதலிடத்தில் உள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer