Friday, February 27, 2015

பிரபல நடிகை ஷகிலா தன் சொந்தக் கதையைப் படமாக்கி வருவதால் அவருக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஹைதராபாதில் நேற்று கவர்ச்சி நடிகையான ஷகிலா தெலுங்கில் தற்போது இயக்கிவரும் ‘ரொமான்டிக் டார்கட்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்துள்ளது.

அந்த படத்தில், அவரது வாழ்க்கையில் நடந்த பாலியல் கொடுமைகள் உள்பட பல அவலங்களை தெரியபடுத்தவுள்ளதாக தெரிகிறது.

மேலும், இதில் பல அரசியல்வாதிகள், முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பற்றியும் காட்சிகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் தற்போது ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்கள் வருவதோடு, இந்த படத்தை வெளியிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று சிலர் தொலைபேசி மூலம் எச்சரித்துள்ளனர்.

மேலும் ஷகிலா இதுபற்றி கூறுகையில், மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன் என்றும் தடைகளை மீறி படத்தை வெளியிடப் போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer