தமிழ்சினிமாவில் புதிய புதிய சிந்தனைகளோடு வரும் இயக்குனர்களிடம் கேளுங்களேன்…
‘உங்கள் லட்சியம் என்ன’வென்று? ‘கமல் சாரை வச்சு ஒரு படம் பண்ணணும்’ என்பார்கள். வயசளவிலும் சரி, மனசளவிலும் சரி, இன்னும் மார்கண்டேயனாக நின்று ரன் அடித்துக் கொண்டிருக்கும் கமலுடன் இப்போது புதிதாக கை கோர்க்கப் போகிறார் தனுஷ்.
திடீர் விஸ்ரூபம் எடுத்திருக்கிறார் தனுஷ். இந்தியில் ஷமிதாப், தமிழில் அடுக்கடுக்காக வெற்றிப்படங்கள் என்று நாலு கால் பாய்ச்சல் நடத்திக் கொண்டிருக்கும் அவர், சிவகார்த்திகேயன் போன்ற இளம் ஹீரோக்களை களம் இறக்கி கிங் மேக்கராகவும் ஆகிக் கொண்டிருக்கிறார். படத்தயாரிப்பில் முன்னை விடவும் படு வேகமாக ரன் ஆகிக் கொண்டிருக்கும் அவரது லேட்டஸ்ட் அதிரடிதான் கமல்.
கடந்த சில தினங்களாக இது சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தவர் கமல் நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறாராம். இந்த படத்தின் இயக்குனரை தேர்ந்தெடுக்கிற பொறுப்பெல்லாம் கமல் வசம் ஒப்படைத்திருக்கும் தனுஷ், முக்கியமான ரோலில் நடிக்கவும் போகிறாராம். இதில் இவருக்கு ஜோடி அக்ஷரா என்கிறது கோலிவுட் பட்சி.
தனுஷை பாராட்டுகிற அதே நேரத்தில் கமலிடம் மீண்டும் ஒரு விஷயத்திற்காக கை குலுக்க வேண்டும். லிங்குசாமி, தனுஷ் போன்ற இளைஞர்களை நாடிச் செல்கிறாரல்லவா? அதற்காகதான் அந்த கைகுலுக்கல்!
Thursday, February 26, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment