தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் கிரிக்கெட் உலகை கலக்கியெடுக்கிறார்.
கிரிக்கெட் உலகில் சாதனை வீரர் என்ற பெருமையை தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஏ.பி. டிவில்லியர்ஸ் விஸ்வரூபம் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி பிரமாண்ட வெற்றியையும் பெற்றது.
கடந்த ஜனவரி 18 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 16 பந்துகளில் 50 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்தார். அதே போட்டியில் 31 பந்தில் சதமடித்து, அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையும் படைத்தார்.
இந்நிலையில் இன்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 64 பந்துகளில் 150 ஓட்டங்களை குவித்து அதிவேகமாக 150 ஓட்டங்கள் குவித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அவர் இந்த அனைத்து சாதனைகளையும் மேற்கிந்திய அணிக்கு எதிராகவே நிகழ்த்தியுள்ளார்.
Friday, February 27, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment