Saturday, February 28, 2015

மேஷம்
சொந்தபந்தங்களால் துயர் விலகும் நாள். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.

ரிஷபம்
சம்பள உயர்வு பற்றிய சந்தோஷச் செய்தி வந்து சேரும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். தனவரவால் தன்னிறைவு காண்பீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும்.

மிதுனம்
துணையாக இருப்பவர்களால் துயரங்கள் வந்து சேரும் நாள். அடுத்தவர்களுக்காக பொறுப்புச் சொல்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். விரயங்கள் கூடும்.

கடகம்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற ஆண்டவனைப் பிரார்த்திப்பீர்கள். தொழில்,உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.

சிம்மம்
கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் காணும் நாள். சகோதர, சகோதரி வழியில் சுபச் செய்தி வந்து சேரலாம். அதிரடியான முடிவுகளை எடுத்து அருகில் இருப்பவர்களை அசர வைப்பீர்கள்.

கன்னி
ஆனந்த வாழ்விற்கு அடித்தளமிடும் நாள். வீட்டை அழகாக வைத்திருப்பதில் ஆர்வம் ஏற்படும். கடிதம் கனிந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும். விருப்ப ஓய்வு பெறும் எண்ணம் மேலோங்கும்.

துலாம்
பணநெருக்கடி அகலும் நாள். அரைகுறையாக நின்ற பணிகள் ஒவ்வொன்றையும் செய்து முடிக்கும் எண்ணம் மேலோங்கும். உடல் நலம் சீராகி உள்ளத்தில் மகிழ்ச்சியைக் கூட்டும். வாகனயோகம் உண்டு.

விருச்சகம்
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காணவேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். இல்லத்தினர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் உள்ளத்தில் அமைதியைக் காணலாம். செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும். பயணங்களால் எதிர்பாராத சிலரின் சந்திப்பு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

மகரம்
பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை காணும் நாள். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் கூடும்.

கும்பம்
உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக அனுகூலம் உண்டு. தொலைபேசி வழி தகவல் ஆச்சர்யபட வைக்கும். வருமானம் திருப்தி தரும்.

மீனம்
கனவுகள் நனவாகும் நாள். கடமையிலேயே கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம். சனிவழிபாடு சந்தோஷம் வழங்கும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer