Friday, February 27, 2015

மேஷம்
நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். தொழில் போட்டிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். செலவுகளில் சிக்கனம் காட்டி சேமிப்பை பெருக்க நினைப்பீர்கள். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.

ரிஷபம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆடை, அலங்கார பொருட்களை வாங்க முன் வருவீர்கள். உத்தியோக உயர்வு உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்
தொட்டது துலங்கும் நாள். துணிவும், நம்பிக்கையும் கூடும். செலவுகளைச் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் சிலவற்றில் மாற்றம் செய்ய நேரிடலாம். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.

கடகம்
உடன்பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு குறையும் நாள். தூரத்து உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். தொழில் நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்
பொருள் வரவிற்கு அஸ்திவாரமிடும் நாள். எதிர்பாராத சிலரின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். அன்னிய தேச வாய்ப்புகள் எண்ணியபடியே கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும்.

கன்னி
செல்வாக்கு மேலோங்கும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உதிரி வருமானங்கள் கைக்கு கிடைக்கலாம்.

துலாம்
பிறரை விமர்ச்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த சொல்யுத்தம் சுமுகமாக முடியும். குடும்பச்சுமை கூடும்.

விருச்சகம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் உண்டாகும்.

தனுசு
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். வீட்டை சீரமைப்பதில் அதிக ஆர்வம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் உருவாகும். தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். உடல் நலம் சீராகும். மற்றவர்கள் குறை சொல்லாத வகையில் நடந்து கொள்வீர்கள்.

கும்பம்
மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும் நாள். தர்ம காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள். முன்னோர் சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகும்.

மீனம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் ரீதியாக வரவேண்டிய பண வரவு கைக்கு கிடைக்கலாம். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்க முற்படுவீர்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer