Wednesday, December 31, 2014

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மலிங்கா, குலசேகரா களமிறங்கவுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளின் போது நுவன் குலசேகரா இலங்கை அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.

இந்நிலையில் அடுத்த மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க நுவன் குலசேகராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காயம் காரணமாக சிகிச்சை பெற்று ஓய்விலிருந்த மலிங்காவும் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை அணியின் பயிற்சியாளர் மார்வன் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை- நியூசிலாந்திற்கு இடையிலான 7 ஒருநாள் போட்டிகள் ஜனவரி மாதம் 11ம் திகதி கிறைஸ்ட்சேர்சில் தொடங்குகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer