Monday, December 29, 2014

ஆசிட் தாக்குதலால் தனது அழகை இழந்த பெண்ணுக்கு மலையாள நடிகர் மம்மூட்டி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

2005ல் லட்சுமிக்கு 15 வயது, வசீகரத் தோற்றம் கொண்ட லட்சுமி, ஆசிட் தாக்குதல் மூலம் தனது அழகு முகத்தை இழந்தார்.

தன்னை ஒரு தலையாக காதலித்த கயவனால், ஆசிட் வீச்சுக்கு ஆளான லட்சுமிக்கு ஆண்கள் மீதே ஒரு வெறுப்பு.

அமிலத் தாக்குதலுக்குப் பிறகு திக்குத் தெரியாமல் இருந்த லட்சுமிக்குக் காதல் துணையாக வந்தார் சமூக ஆர்வலர் தீக்ஷித். உன் சம்மதம் வரும் வரை எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் காத்திருப்பேன் என்று அழகாக காதலை வெளிப்படுத்திய தீக்ஷித்தின் ஆண்மைதான் லட்சுமிக்கு இப்போது பக்கபலம்.

இவர்களின் காதல் கதையைக் கேள்விப்பட்ட நடிகர் சல்மான்கான், தனது ‘சத்யமேவ ஜெயதே’ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர்களை அறிமுகப்படுத்திக் கௌரவிக்க, ஷாரூக், ரசூல் பூக்குட்டி என்று வி.ஐ.பி.க்களிடம் இருந்து வந்து உதவிகள் குவிந்தன.

இப்போது 24 வயதாகும் லட்சுமிக்கு, உனக்குப் பழைய தோற்றம் வரும் வரை நீ என்னுடைய ஆயுர்வேத மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று லேட்டஸ்ட்டாக அன்புக் கட்டளை இட்டிருப்பவர் நடிகர் மம்முட்டி.

மலப்புரத்தில் இருக்கும் மம்முட்டிக்குச் சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் இப்போது லட்சுமி சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer