Wednesday, December 31, 2014

போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார்.

துபாயில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ரியல் மட்ரிட் அணிக்காகவும் விளையாடி வரும் ரொனால்டோ இது பற்றி கூறுகையில், கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதனைக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வருகின்ற ஜனவரி மாதம் உலகின் உயர்ந்த விருதான பலோன் டி ஆர் எனப்படும் தங்க கால்பந்து விருது அறிவிக்கப்படவுள்ளது.

இந்த விருதிற்கான போட்டியில் ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் ஜேர்மன் அணியின் கோல் காப்பாளர் மானுவல் நேயர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer