Wednesday, December 31, 2014

அவுஸ்திரேலியாவில் 4வது துடுப்பாட்டக்காரராக இறங்கி அதிக ஓட்டங்களை குவித்த சாதனையில் சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், விராட் கோஹ்லி 499 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

2007-08ல் அவுஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்ஸிகளில் சச்சின் டெண்டுல்கர் 480 ஓட்டங்கள் எடுத்திருந்ததே அந்த நாட்டில் நான்காவதாக களமிறங்கி எதிர்தரப்பு நாட்டு வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

தற்போது அதை கோஹ்லி முறியடித்துள்ளார். சிட்னியில் இன்னுமொரு டெஸ்ட் மீதமுள்ள நிலையில் கோஹ்லி எளிதாக 500 ஓட்டங்களை கடப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

முன்னதாக 1977-78ல் குண்டப்பா விஸ்வநாத் 9 இன்னிங்ஸிகளில் 473 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகளின் லாரா 8 இன்னிங்ஸிகளில் 466 ஓட்டங்களும், இங்கிலாந்தின் கென் பாரிங்டன் 8 இன்னிங்ஸிகளில் 464 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer