Tuesday, December 30, 2014

மேஷம்
உறவினர்களால் உற்சாகம் பெருகும் நாள். திருமண முயற்சிகள் கைகூடி வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் ரீதியான பயணம் பலன் தரும் விதத்தில் அமையும்.

ரிஷபம்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டை அலங்கரித்துப் பார்ப்பதில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்
நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய ஆசையன்று நிறைவேறும். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

கடகம்
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும். தொழில் பணியாளர்களுடன் ஏற்பட்ட பனிப்போர் விலகும்.

சிம்மம்
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய நாள். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எடுத்த

கன்னி
கடவுள் வழிபாட்டால் காரிய வெற்றி ஏற்படும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். பழகிய சிலாதின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலை உருவாகும்.

துலாம்
பொது வாழ்வில் பொறுப்புகள் கூடும் நாள். போட்டிகளைச் சமாளித்து புகழ்காண்பீர்கள். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமையைக் குறைக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சகம்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒளிமயமான எதிர்காலத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகலாம்.

தனுசு
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். உத்யோகம் சம்மந்தமாக சில அனுபவமிக்கவர்களைச் சந்திக்கும் சூழ்நிலை உண்டு. கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கூடும்.

மகரம்
சகோதர வழியில் சந்தோஷச் செய்தி வந்து சேரும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடிவடையும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். சிவாலய வழிபாடு சிறப்பினை வழங்கும்.

கும்பம்
அந்தஸ்து உயரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சேமிப்பில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

மீனம்
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். வரவு வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உருவாகும். இறைவழிபாடு இனிமை சேர்க்கும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer