Friday, November 28, 2014

தமிழக காங்கிரஸில் கோஷ்டி பூசல் அதிகமாக இருக்கும், அதில் நீங்கள் சிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குஷ்புவிடம் கூறியுள்ளார்.

காங்கிரசில், நேற்று முன்தினம் இணைந்த நடிகை குஷ்பு, நேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பின் போது, குஷ்புவிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்ட ராகுல், தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் அதிகமாக இருக்கும். எந்த கோஷ்டியிலும் நீங்கள் சிக்காமல், கட்சியை வளர்த்தெடுக்கும் பணியை செய்யுங்கள்.

குழந்தை நட்சத்திரமாக நீங்கள் நடித்த படங்களை, நான் பார்த்திருக்கிறேன் என சொல்லியிருக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer