Saturday, November 29, 2014

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் வை ராஜா வை என்கிற திரைப்படத்தில், தனுஷ் ஒரு பாடலை எழுத, அதைப் பாடி தனுஷை குஷிப்படுத்தி இருக்கிறார் இசை ஞானி இளையராஜா.

தனுஷின் மனைவி சவுந்தர்யா இயக்கும் படம் வை ராஜா வை. இந்தப் படத்தில் யுவனுடன் கைக்கோர்த்து இருக்கிறார் ஐஸ்வர்யா. இந்த படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் இருவரும் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். படத்தில் யுவன் இசையில் மூவ் யுவர் பாடி என்கிற பாடலை தங்லீஷில் எழுதியிருக்கிறார் தனுஷ். இந்த பாடலை பாடி தனுஷ் மட்டுமின்றி தமது மகன் யுவனையும் குஷிப்படுத்தி இருக்கிறார் இளையராஜா. எந்தவித விமர்சனமும் இன்றி தமது தங்லீஷ் பாடலை பாடிய இளையராஜாவைப் புகழ்ந்து தள்ளியுள்ளார் தனுஷ்.

இளையராஜா எனது பாடலை பாடியதன் மூலம் தாம் முழு கவிஞனாக அங்கீகாரம் பெற்றுள்ளதாக சிலாகித்துள்ள தனுஷ், இளையராஜா தமது உயிர், தமக்கு கடவும் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளியுள்ளார். படத்தில் மொத்தம் 5 பாடல்கள் என்றும், இதில் மீதம் 4 பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer