ப்ரிஸ்பேன் நகரை சேர்ந்த அலானா பியர்ஸ் (21) என்ற பெண் இணையத்தில் வீடியோ கேம்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் பேஸ்புக்கில் அவருடன் பேசிய சில இளைஞர்கள், உன்னை நேரில் பார்த்தால் கற்பழித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து அலானா அந்த 4 இளைஞர்களின் தாயாரையும் பேஸ்புக்கில் கண்டுபிடித்து, நடந்தவற்றை தெரிவித்ததோடு அவர்கள் மகன்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
இதற்கு ஒரு தாயார் மட்டும் பதிலளித்துள்ளதாக தெரிகிறது. அவர் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளதோடு, இதுபற்றி தனது மகனிடம் பேசுவதாக கூறியுள்ளார்.
மேலும், அலானா இந்த உரையாடலின் புகைப்படத்தை தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.அதனால் இதற்கு ஏராளமானோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான கெட்ட செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அலானா நல்ல பாடம் புகட்டியதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அலானா கூறுகையில், தான் இவ்வாறு செய்ததால் இளைஞர்கள் மறுபடியும் இப்படி செயல்படமாட்டார்கள் என நம்புவதாகவும், இளைஞர்கள் இணையதளத்தை நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment